×
 
☰

வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!

புதுச்சேரி மாநில மது பாட்டில்களை வைத்து வீட்டில் மினி டாஸ்மாக் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட். (27) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் புதுவை மாநில மது பாட்டில்களை கொண்டுவந்து வீட்டிலேயே வைத்து விற்பனை செய்து வருகிறார்.  மினி டாஸ்மாக்காக தன்னுடைய வீட்டை மாற்றி விற்பனையில் ஈடுபட்டு வரும் இவர்  குள்ளஞ்சாவடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அம்பலவாணன் பேட்டை பகுதிக்கு சென்ற குள்ளஞ்சாவடி போலீசார் அவர் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

இதையும் படிங்க: என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

பின்னர் அவரை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்து தற்போது சட்டவிரோதமாக மது கடத்தி வருவது, சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

புதுச்சேரி மது பாட்டில்களை கொண்டு மினி டாஸ்மாக் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share