விசிக-ன்னா அவ்வளவு இழக்காரமா?... திமுகவால் செம்ம அப்செட்டில் திருமா... தொண்டர்களிடம் வேதனையுடன் புலம்பல்...!
கூட்டணியில் விசிகவிற்கு சொற்ப தொகுதிகளே ஒதுக்கப்படுவதாக தொண்டர்களிடம் திருமாவளவன் வேதனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2016 சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நல கூட்டணியை உருவாக்கி காட்டியதை அடுத்து திருமாவளவன் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதன் பின்னர் திமுகவில் இணைந்த திருமாவளவன் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். சிதம்பரத்தில் பானை சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் நின்று விசிக வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். 2024 மக்களவை தொகுதியின் போது சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் பானை சின்னத்தில் நின்று இரண்டிலும் வெற்றி பெற்றார்கள். இதனையடுத்து விசிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது.
இதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கூடுதல் தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டிருந்தது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 6 தொகுதிகளை பெற்ற நிலையில், இந்த முறை 12 தொகுதிகளை விசிக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடந்த முறை வாங்கிய 6 தொகுதிகளையே பெற்றுக்கொள்ளுங்கள் என்று திமுக பேச்சுவார்த்தைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன், தனது கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த முறை 6 தொகுதிகளைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், மதிமுகவிற்கு 4 இடங்களுமே ஒதுக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், விசிகவிற்கு தொகுதிகளை குறைக்காமல் கடந்த முறை வழங்கிய 6 தொகுதிகள் உறுதியாக வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!
குறைந்தபட்சம் 8 தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதனால் அப்செட்டான திருமாவளவன் முகநூல் நேரலை மூலமாக தொண்டர்களிடம் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார். இந்த முறையும் நமக்கு 10க்கும் குறைவான சொற்ப தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த நிர்வாகிகள் தன்னிடம் சீட் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தன்னை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே 6 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சீட் கேட்காதீர்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் 25 தொகுதிகள் கிடைத்த போது அனைவருக்கும் தாராளமாக கொடுத்தோம், ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன எனக்குறிப்பிட்ட திருமா, எண்ணிக்கையை விட கொள்கை முக்கியம், நம்மை போன்ற கொள்கை உடைய கட்சிகளுடனே கூட்டணி அமைத்திருக்கிறோம், எனவே இடங்கள் குறைத்து பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம் எனக்கூறியுள்ளார்.
தற்காலிக பின்னடைவாக இருந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொகுதிகளை பெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலின் மையம் நம்மைச் சுற்றியே இருக்கும் என்பதை வரலாறு உணர்த்தும். விசிக மட்டும் வளர நினைக்கவில்லை ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து வளர விரும்புகிறோம் எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய திருமா, விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர வேண்டும் என யாரும் நினைப்பதில்லை என்ற தனது வேதனையையும் தொண்டர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வக்பு வாரிய செயல்பாடுகள் மோசம்!! திமுக மீது முஸ்லிம்கள் அதிருப்தி! சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கும் மு.க.ஸ்டாலின்!