×
 

கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே நீண்டகாலமாக நிலவும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப காலத்தில், தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக காவிரி பகுதியில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பொழியவில்லை.

கர்நாடகாவின் காவிரி பிடிப்புப் பகுதிகளில், குறிப்பாக கோடகு பகுதியில் சுமார் 35-45 சதவீதம் மழைப்பொழிவு குறைவு பதிவாகியுள்ளது. இதனால், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்), கபினி, ஹரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட நான்கு முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு மொத்த கொள்ளளவின் சுமார் 54 சதவீதம் மட்டுமே உள்ளது. ஜூன் முதல் ஜூலை இறுதி வரை நீர் வரத்து சராசரியை விட பெருமளவு குறைவாக இருந்ததால், குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமான நீர் இருப்பதாக கர்நாடக அரசு வாதித்தது. 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஜூலை 28 அன்று டெல்லியில் கூடி விவாதித்தது. தமிழகம் தரப்பில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான திட்டமிட்ட நீர் அளவில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், பிலிகுண்டுலு புள்ளியில் மிகக் குறைவான நீர் ஓட்டமே வந்துள்ளதாகவும் விளக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என தமிழகம் வலியுறுத்தியது. இதையடுத்து, CWRC கர்நாடகாவுக்கு தினசரி 3,500 கன அடி நீரை 15 நாட்கள் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது. இது சுமார் 4 டிஎம்சி அளவுக்கு சமம். 

இதையும் படிங்க: செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

இந்த உத்தரவுக்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு குறைவால் அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், அதனால் தற்போதைக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனக்கு கூறியுள்ளார். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாத போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாற நேரிடும் என எச்சரித்துள்ளார். இனியும் கர்நாடக அரசு நமக்கு நியாயம் செய்யும் என்ன நம்புவதற்கு இடமில்லை எனவும் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கவின் கொலை... ஓராண்டு நினைவு நாள்.. கவின் குடும்பத்தை சந்தித்த அமைச்சர் வன்னியரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share