வலுவான ஆதாரம் இருந்ததால் தான் நீதி கிடைத்தது..! திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய திருமா..!
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு திமுக., அதிமுக கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசின் முயற்சியால் நீதி கிடைத்துள்ளதாக ஒரு பக்கமும் அதிமுக ஆட்சியில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் தான் நீதி கிடைத்ததாக மறுபக்கமும் பேசப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு திமுக அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை என தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக மிக முக்கிய வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சரியான தண்டனை கிடைத்துள்ளது எனவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ் நாட்டிற்கு கலங்கத்தை ஏற்படுத்திய செயல் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!
இதையும் படிங்க: போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் ஏன் வெளியிடணும்.? புரியாத புதிரா இருக்கே.. கேள்வி எழுப்பும் திருமாவளவன்!