×
 

அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!

அதிமுகவை பயன்படுத்தி இங்கே வளர துடிக்கிறார்கள். அதிமுகாவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள் என்றார். 

முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டுதலின் படி, அவர் இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாரதிய ஜனதா கட்சியை தன் கொள்கை பகையாக முன்னிறுத்துகிறதே தவிர அதிமுகவை அவ்வாறு முன்னிறுத்தவில்லை. பாஜகவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல உள்ளன.

பீகாரிலே ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜக தான் காரணம். மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்ததற்கு பாஜ கதான் காரணம். இப்படி பல உதாரணங்களை சான்றுகளை காட்ட முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி அவர்கள் முதுகிலேயே சவாரி செய்து அந்தந்த மாநிலங்களில் காலூன்றி வருகிறது பாஜக, அதே உத்தியை தமிழ்நாட்டிலும் பாஜக கையாளுகிறது. 
அதிமுகவை பயன்படுத்தி இங்கே வளர துடிக்கிறார்கள். அதிமுகாவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள் என்றார். 

பாஜக திமுகாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட அதிமுகவை பலவீனப்படுத்தி இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் வந்துவிட வேண்டும் என்கிற பதை பதைப்பு தான் பாஜகவிடம் மேலோங்கி இருக்கிறது. இதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறோம். அதிமுகவின் மீது ஒரு தோழமை உணர்வு இருக்கிறது. அது பாழ்பட்டு விடக்கூடாது, சிதைந்து விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வோடு தான் இதை சுட்டிக்காட்டுகிறோமே தவிர அதிமுக மீதோ அல்லது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை. 

திமுக கூட்டணியில் நாங்கள் இருப்பதால் தான் பாஜகவையும் அதிமுகவையும் விமர்சிக்கிறோம் என்று பலர் கருதுகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவின் கொள்கைகளை விசிக ஒருபோதும் ஏற்காது ஏற்கனவேயும் விமர்சித்திருக்கிறோம் தொடர்ந்து விமர்சிப்போம். அதிமுக குறித்து திருமாவளவன் கவலைப்பட வேண்டாம். கூட்டணியில குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க. யாராலையும் அதிமுக பாஜாக கூட்டணியை உடைக்க முடியாது அப்படின்னு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

பாஜாக அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. அதிமுக ஒரு திராவிட இயக்கம், பெரியார் கொள்கைகளை பேசுகிற இயக்கம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்புறவோடு தான் முன்வைக்கிறோம். அது தேவையற்றது என்றால் நாங்கள் பேசப்போவதில்லை. 20 தொகுதிகள் மட்டும் வெற்றி பெறப்போகும் கூட்டணி எதற்காக கருத்து கணிப்பு நடத்துகிறது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திரும்பத் திரும்ப ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தலைவர் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார் என்பதை மறந்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார் என்றார். 
 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share