×
 

காசில்லைனு செக் ரிட்டர்ன் ஆக கூடாது! விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் கறார் கண்டிசன்!

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலை, வி.சி., சார்பில் வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பால், அந்த பணம் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த மாதம் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக்) தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம், இன்னும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக்) சார்பில் தலா 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமூக வலைதள அறிவிப்பு, அந்த காசோலைகள் செல்லுபடியாகுமா, பணம் உண்மையில் கிடைக்குமா என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு விசிக் சார்பில் தலா 50,000 ரூபாய் காசோலைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. கட்சித் தலைவர் திருமாவளவன் கரூரில் நேரில் சென்று இந்த உதவியை அளித்தார். முன்னாள் அமைச்சர் எஸ். செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.  இது, அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் செய்யாத உதவியை விசிக செய்துள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விசிக் சார்பில் தலா 50,000 ரூபாய் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டச் செயலாளும் தலா 10,000 ரூபாயை கட்சி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். 

இதையும் படிங்க: திருமாவுக்கு ஏதாச்சுன்னா!! தமிழகமே இயங்காது! அண்ணாமலை நடக்கவே முடியாது! விசிக மிரட்டல்!

அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பணம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிடும் நிலை வரக்கூடாது. காசோலையைத் தவிர்த்து நேரடியாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், விரைவில் கட்சி நிர்வாகப் பொறுப்புகள் அறிவிக்கப்படும்" என அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால், ஏற்கனவே வழங்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகுமா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணம் உண்மையில் கிடைக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலாக, விசிக மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாவலன் தெரிவித்தது: "விசிக் பொருளாதார வசதி படைத்த கட்சி இல்லை. கட்சி நிர்வாகிகள் பெரும் முதலாளிகள் அல்ல. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்துள்ளோம். அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் செய்யாததை விசிக் செய்துள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பணம் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் பணம் வழங்கப்படும்" என உறுதியளித்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்தது. திருமாவளவன், இது போதாது என 50 லட்சம் ரூபாய் உயர்த்த வேண்டும் என கோரியிருந்தார்.  விசிக இந்த உதவியை விரைவாக அளித்தது பாராட்டைப் பெற்றாலும், அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகள் பணம் செலுத்துமா என்பது கவனிக்கத்தக்கது.

இந்தச் சம்பவம், அரசியல் கட்சிகளின் உதவி உண்மையானதா என பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்போது பணம் பெறுவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்!! கரூர் சம்பவத்தில் ட்விஸ்ட்! விஜயுடன் நீலாங்கரையில் நடந்த திடீர் சந்திப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share