அது என்ன கவர்மெண்ட் பணமா? வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு! அதிரடி உத்தரவு...!
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீடு தொகை வழக்கு விசாரணைக்கு வந்தது.
சந்தன மர கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு நிலுவைத் தொகை வழங்குவது குறித்த வழக்கின் விசாரணை நடந்தது. நிலுவை இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது இந்த தொகை அரசு பணம் அல்ல என்றும் மக்கள் பணம், மக்கள் பணத்துக்கு அரசு அறங்காவலர்தான் என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டு ஒரு வருடம் ஆகியும் அமல்படுத்தாது நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளதாகவும், நிலுவை இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்குவதை எதிர்த்து நீதிமன்த்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இழப்பீடு தொகை மக்களின் பணம் என்றும் அரசு பணம் அல்ல, மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என்றும் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: குன்னூரில் ஒரே வீட்டில் 79 ஓட்டுகளா? சர்ச்சை... TN FACT CHECK கொடுத்த விளக்கம்...!
பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் SIR... அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு...!