விஷ வண்டு கடித்து உயிரிழந்த பேராசிரியர்...! ஒரு கோடி இழப்பீடு கொடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்.!!
விஷ வண்டு கடித்த பேராசிரியர் உயிரிழந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி அருகே விஷவண்டு தாக்கி உயிரிழந்த வேளாண் உதவிப் பேராசிரியரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி இருக்கிறார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷவண்டு தாக்கி உயிரிழந்த வேளாண் உதவிப் பேராசிரியர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய சுரேஷ், தான் பணியாற்றும் கல்லூரியைச் சேர்ந்த 18 மாணவ, மாணவிகளை வேளாண் களப் பயிற்சிக்காக அழைத்துச் சென்றதாகவும், அப்போது மாணவிகளுடன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கோழிப்பாக்கம் பாப்புகுளத்தில் வேளாண் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த புதரில் இருந்து வெளியேறிய விஷவண்டுகள், உதவிப் பேராசிரியர் சுரேஷ் மற்றும் மாணவ, மாணவியர்களை துரத்தித் துரத்தித் தாக்கிய சம்பவத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் உதவிப் பேராசிரியர் சுரேஷ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷின் குடும்பத்தாருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக வேல்முருகன் கூறினார்.
இதையும் படிங்க: கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!
விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அங்கு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மேலும், உயிரிழந்த உதவிப் பேராசிரியர் சுரேஷின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!