×
 

தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

தலைநகரில் ஆயுத மோதல் நடந்திருப்பதாக கூறி வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலி மேம்பாலம் அருகிலுள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இருதரப்பினர் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் பொதுமக்கள் அச்சத்தில் சிதறி ஓடியதுடன், பலர் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் தலைநகரில் பொதுமக்கள் வசிக்கும் அடர்ந்த குடியிருப்புப் பகுதியில் ஆயுதங்களுடன் மோதல் நடைபெறும் நிலை ஏற்பட்டிருப்பது, காவல்துறையின் கண்காணிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.மக்கள் வீதியில் நடமாட வேண்டாமா? கத்திக்குத்துக்கு அஞ்சி ஓட வேண்டுமா? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் போன்றவர்களின் படுகொலைக்குப் பிறகும் தலைநகரில் சரியான கண்காணிப்புகள் இல்லாமல் இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை போன்ற பெருநகரத்தில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை என்றும், குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட குற்றம் நிகழாமல் தடுப்பதே திறமையான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் அடையாளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

இந்த மோதலுக்கான உண்மையான காரணம் என்ன? ஆயுதங்களுடன் மோதியவர்கள் யார்? இதற்கு முன்பே இவர்கள்மீது குற்றப் பின்னணி இருந்ததா? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? பொதுமக்கள் பாதுகாப்புக்கு காவல்துறை எடுத்த உடனடி நடவடிக்கை என்ன? இதற்குப் பின்னால் போதைக் கலாச்சாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு காவல்துறையும் தமிழக அரசும் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார்.சென்னை தலைநகர் என்பதற்காக மட்டும் பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்

 

இதையும் படிங்க: மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share