தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!
சட்டசபையில் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு எஸ் பி வேலுமணி தரப்பு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அதிமுகவில் எஸ் பி வேலுமணி தரப்பு ஆதரவளித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து ஆதரவு தெரிவிப்பதாக வேலுமணி அறிவித்துள்ளார். பதவிக்கு ஆசைப்பட்டு வரவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். எஸ்.பி. வேலுமணி பேசுவதற்கு இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “அதிமுகவுக்குள் பிளவு இல்ல... ஆனா...” - பிறந்தநாளில் இபிஎஸுக்கு ஷாக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி...!
அவையில் அதிமுகவின் இரு அணிகளும் மோதிக்கொண்டன. சபாநாயகரிடம் ஒரு தரப்பு அதிமுகவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். சலசலப்புக்கு மத்தியில் தமிழக வெற்றி கடக அரசுக்கு ஆதரவு கொடுப்பதாக எஸ்.பி. வேலுமணி பேசி முடித்தார். முன்னதாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!