விஜய்யை நம்பி எல்லாமே போச்சு!! எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் பயங்கர மோதல்! பகீர் பின்னணி!
தேர்தலுக்கு பிறகு பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான அதிமுக உடைந்தது. வேலுமணி, சண்முகம் தலைமையில் தனி டீம் உருவானது.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக உள்கட்சி மோதல் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவானது. பதவி மற்றும் அதிகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உருவான இந்த அணியில் ஆரம்பத்தில் 25 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
சட்டசபையில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பில், இந்த அணி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், தமிழக வெற்றிக் கழக அரசு அமைச்சரவை விரிவாக்கத்தில் எந்த முக்கிய பதவியும் வழங்காததால், வேலுமணி - சண்முகம் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் பின்னர் அடுத்தடுத்து ஆறு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால் வேலுமணி - சண்முகம் அணியின் பலம் வேகமாக குறைய தொடங்கியது. வேறு வழியில்லாமல் மீண்டும் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமியுடன் சமாதான பேச்சு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிங்க: 40 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைப்பு! இபிஎஸ் பலம் அதிகரிப்பு! முரண்டு பிடிக்கும் சி.வி.சண்முகம்!
இதற்கிடையில், சமாதான பேச்சுக்கு முன்பாகவே வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலுமணி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், “கட்சியின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று இபிஎஸ் விலக வேண்டும் என்பதே சி.வி.சண்முகத்தின் திட்டமாக இருந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்காக த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தது வேலுமணி தான். பின்னர் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததால், சண்முகம் கடும் கோபமடைந்தார்” என தெரிவித்தார்.
அப்போது “எல்லா பிரச்னைக்கும் நீங்கள் தான் காரணம்” என சண்முகம் குற்றம்சாட்ட, “அது எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு” என வேலுமணி பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மூத்த நிர்வாகிகள் தலையிட்டு சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Breaking! அதிமுகவில் சமாதானம்! இணைந்தது இரு அணிகள்?! இபிஎஸ் வீட்டிற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு வருகை!