நீயா? நானா? என்ற ஈகோ பிரச்சனை... பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்திற்கு ஆணையிட்ட தமிழக அரசு..!
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணை துணைவேந்தர்கள் நியமனங்களை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணை வேந்தர்கள் இல்லை. மற்ற பல்கலைகழகங்களில் முழுவதுமாக பதிவாளர்கள் மற்றும் பொறுப்பு துணைவேந்தர்கள், பொறுப்பு குழு ஆகியவை மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காலியாக உள்ள துணைவேந்தர்கள் நியமனர்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தமிழ் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான தேடுதல் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்..! தமிழக அரசு மீது ஆளுநர் பரபரப்பு புகார்..!
இதையும் படிங்க: தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய ஐகோர்ட்.. ரூ.50 லட்சம் ஃபைன் போட்ட சம்பவம்..!