×
 

துணை ஜனாதிபதி தேர்தல்... இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்..!

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்தது.  தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கட்சிப் பாகுபாடு இன்றி சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.  இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

ஹைதராபாத்தில் 1946-ல் பிறந்த சுதர்ஷன் ரெட்டி ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி 2007 உச்சநீதிமன்ற நீதிபதியானவர். 2005 இல் கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்சன் 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நான்காண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சுதர்ஷன் ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.

இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல்… NDA கூட்டணி வேட்பாளர் CP ராதா கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

மயில்சாமி அண்ணாதுரை, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி மற்றும் திருச்சி சிவாவின் பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருந்தார்.

அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணியின் சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல் - முதல்வரின் முடிவே என் முடிவு.. கமல்ஹாசன் எம்.பி கருத்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share