கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு! தன் கையாலேயே அனைவருக்கும் தேநீர் பரிமாறிய விஜய்..!
கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொது மேடை நிகழ்ச்சி, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஆர்வத்தால் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது.விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் உற்சாக சுற்றுப் பயணம் அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்காத நிலையில், இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து பேசினார். ஈடு செய்ய முடியாத உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும் ஆறுதலையும் விஜய் தெரிவித்து கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் இருக்கேன்... கவலைப் படாதீங்க..! விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு... கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பெறத் திட்டம்...!
உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் மருத்துவ,கல்வி செலவுகளை ஏற்பதாகவும் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது அனைவருக்கும் விஜய் தன் கையாலேயே தேநீர் பரிமாறினார்.
இதையும் படிங்க: எல்லாம் ரெடி..! லொகேஷன் பாத்தாச்சு... கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்...!