×
 

ஜனநாயக பட ஊழலை ஒழிச்சுட்டு பேசுங்க விஜய்! அதிமுக யார் கிட்ட இருக்குன்னு தெரியனுமா? சிங்கை ராமச்சந்திரன் பதிலடி

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்ற விஜயின் கேள்விக்கு சிங்கை இராமச்சந்திரன் பதிலளித்தார்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் போது அரசாங்கம் நிர்ணயத்தை தொகையில் மட்டும் கட்டணம் வசூல் செய்து ஊழல் ஒழிப்பின் முதல் படியை விஜய் ஆரம்பித்தால் நீங்கள் பேசுவதை வரவேற்கும் என்று அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி தற்போது யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்று விஜய் பேசி இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக மாணவர் அணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஒரு திரைப்படம் வெளியாக்கினால் அதற்கான டிக்கெட் விலை அரசு நிர்ணயித்துள்ளது 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தான்., ஆனால் ரசிகர்களுக்கான காட்சிகள் என 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்றும் உங்கள் ஜனநாயக திரைப்பட வெளியீட்டில் நடக்கும் ஊழலை ஒழித்து விட்டு பேசுங்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எந்த மாநிலமும் ஐந்து ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரியை கொண்டுவராமல் இருந்த நிலையில், 11 மருத்துவக் கல்லூரியை கொடுத்தவர் கையில் அதிமுக இருப்பதாகவும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை மருத்துவர்கள் ஆக்கி காட்டியவரிடம் அதிமுக இருப்பதாகவும் தெரிவித்தார்.

60 ஆண்டு கால பிரச்சனையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திட்டத்தை முடித்துக் கொடுத்தவரிடம் அதிமுக இருப்பதாகவும், டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, மின் கட்டணத்தை உயர்த்தாமல், சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் பார்த்துக் கொண்டவரிடம் அதிமுக உள்ளதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: தவெக மாநாடு மூலம் அமித் ஷாவை குஷிப்படுத்திய விஜய்... வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி...!

மேலும், கொரோனாவை சிறப்பாக கையாண்ட முதன்மை மாவட்டமாக பெயர் பெற்றவரிடம் அதிமுக இருக்கிறது என்றும் உங்களைப்போல அப்பாவின் ஆதரவு இல்லாமல் சுயம்புவாக, கிளைச் செயலாளராக இருந்து, முன்னாள் முதல்வராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக வளர்ந்திருப்பவரிடம் அதிமுக இருப்பதாகவும், 72 வயதிலும் கடந்த மூன்று மாதங்களில் பத்தாயிரம் கிலோ மீட்டர் பயணித்து 100 சட்டமன்ற தொகுதிகளில் திமுக தவறுகளை எடுத்துரைப்பவரிடம் அதிமுக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சி ஆரம்பித்த ஒன்றரை ஆண்டுகளில் அரை மணி நேரம் பேச்சும், அரை கிலோமீட்டர் ramp walk மட்டும் செய்யும் உங்களைப் போன்றவரிடம் கட்சியில் இல்லை என்றும் இன்பநதி, உதயநிதி என பெயர்களை கேட்டாலே திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதை போல இருக்கிறது என திமுகவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்த காலத்திலும் திமுக தீய சக்தி என பேசிக் கொண்டு இருந்தவரிடம் அதிமுக உள்ளதாகவும் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த முதல்வர் இபிஎஸ்! வாங்க உழைக்கலாம்.. பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share