விஜய்–அஜித் சந்திப்பில் இப்படியொரு சம்பவமா? பரிசுகளை பரிமாறிக்கொண்ட நட்சத்திரங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
அந்த மினியேச்சரில் விஜய் தனது கைப்பட, “அன்பான சகோதரர் அஜித்” என குறிப்பிட்டு, தனது பெயரையும் கையெழுத்தாக பதிவு செய்துள்ளார்.
தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய்–அஜித் சந்திப்பு தற்போது மற்றொரு காரணத்திற்காக கவனம் பெற்றுள்ளது. லண்டனில் நடைபெற்ற சந்திப்பின்போது இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பரிசுகளை பரிமாறிக்கொண்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள நிலையில், அங்குள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் அஜித் தொடர்புடைய கார் பந்தய நிகழ்வை முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரில் சந்தித்து அன்புடன் கட்டித்தழுவிக் கொண்டனர்.
இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. நீண்ட நாட்களாக விஜய்–அஜித் ரசிகர்களிடையே போட்டி மனப்பான்மை பேசப்பட்டு வரும் நிலையில், இருவரும் நேரில் சந்தித்து நட்புடன் பழகிய காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
இதையும் படிங்க: விரைவில்..!! தமிழ்நாட்டில் "MOTOR SPORTS CITY"..! அமைச்சர் ஆதவ் தகவல்..!
இந்த சந்திப்பின்போது இருவரும் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய், நடிகர் அஜித்துக்கு ரேசிங் காரின் மினியேச்சர் மாடல் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த மினியேச்சரில் விஜய் தனது கைப்பட, “அன்பான சகோதரர் அஜித்” என குறிப்பிட்டு, தனது பெயரையும் கையெழுத்தாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகர் அஜித்தும் முதல்வர் விஜய்க்கு ஹெல்மெட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார் பந்தயம் மீது அஜித்துக்கு இருக்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பரிசு அமைந்துள்ளது.
விஜய்–அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலான நிலையில், தற்போது இருவரும் பரிமாறிக்கொண்ட பரிசுகள் குறித்த தகவலும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அரசியல் மற்றும் சினிமா தளங்களில் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இரு பிரபலங்களின் இந்த சந்திப்பு, அவர்களது ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!