விஜய் கடந்துதாங்க போகணும்... இங்க எல்லாமே நடக்கும்..!! அண்ணாமலை சப்போர்ட்..!!
விஜய் விவாகரத்து விவகாரம் தொடர்பாக பேசிய அண்ணாமலை, அவர் அதனை கடந்து தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அதிர்ச்சி தகவலாக, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கியது என்றாலும், அது இப்போதுதான் பொதுவெளியில் வெடித்துள்ளது.
சங்கீதா, 2025 டிசம்பர் 3 அல்லது 5 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன் பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், திருமணம் 27 ஆண்டுகளாக நீடித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், திருமணம் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவின் முக்கிய குற்றச்சாட்டு, விஜய் ஒரு பிரபல நடிகையுடன் 2021 ஏப்ரல் மாதம் முதல் கள்ளஉறவில் ஈடுபட்டுள்ளார் என்பதாகும்.
இது தனக்கு தெரிய வந்தபோது, விஜய் அந்த உறவை முடித்துவிடுவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை அது தொடர்ந்ததாகவும் சங்கீதா கூறியுள்ளார். இதனால் தனக்கு கடுமையான மன உளைச்சல், உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு, மன ரீதியான கொடுமை ஏற்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மூலம் பொது இழிவு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இருவரும் 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னையில் இடைமத சமயத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!
பல ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இருந்து விலக்கி வைத்திருந்த விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. விஜய் மனைவி டிசம்பரில் தாக்கல் செய்த விவாகரத்து மனு இப்போது வெளி வந்தது ஏன் என்ற கேள்விக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, விஜய் அவர்களின் அரசியல் கருத்துக்கு நான் பதில் சொல்கிறேன் என்றும் அதற்கு தயாராக இருக்கிறேன்., தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை மிகவும் தெரிவித்தார். அரசியலுக்கு வந்துவிட்டால் அதுவரை தோண்டப்படாத அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள் என்பது அது எல்லா தலைவருக்குமே இருந்ததுதான் என்றும் கூறினார். விஜய் அரசியலுக்கு வரும்பொழுதே இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார் என்றும் இதை அவர் கடந்து தான் போக வேண்டும்., இதை தாண்டி தான் அவரது அரசியல் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!