சீமான் களமிறங்கிய காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்..! அனுமதி கொடுத்த போலீஸ்..!!
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சார மேற்கொண்டு வருகிறார். ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். நேற்றைய தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
எதிர்பாராத வகையில் அலைக்கடலென மக்கள் திரண்டனர். இந்த நிலையில் விஜய்யின் அடுத்த அடுத்த பிரச்சாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. காரைக்குடியில் விஜய் பிரச்சார மேற்கொள்ள அனுமதிக்குவரப்பட்டு இருந்தது. தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
காரைக்குடியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகே விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களை குறிப்பிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் மனு தந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த இடத்தை தேர்வு செய்து உள்ளார்கள்.
இதையும் படிங்க: விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!
நேற்றைய தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு நிலையில் அலைக்கடலென மக்கள் திரண்டனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் காரைக்குடி தொகுதியில் பிரபு என்பவர் வேட்பாளராக களம் காணும் நிலையில், விஜய் பிரச்சாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! தமிழக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிக்கை!