×
 

விஜய்க்கு ஷாக்… தலையில் விழுந்த அடுத்த இடி… பிரச்சார வாகனம் பறிமுதல்…!

நீதிமன்ற உத்தரவை அடுத்து விஜயின் பிரச்சார வாகனம் என்று பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

HIT AND RUN வடக்கு ஏன் பதியப்படவில்லை என்றும் விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா என தமிழக அரசை நோக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்குப்பதிய என்ன தடை என்றும் புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிய வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

விஜய் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது என்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். 

இதையும் படிங்க: உத்தரகாண்டில் ஆதவ் அர்ஜுனா... உண்மை வெளிவரும் என திட்டவட்டம்...!

தமிழக வெற்றி கழகம் என்ன மாதிரியான கட்சி, அந்த இடத்தில் இருந்து அனைவரும் பறந்து விட்டனர் என வேதனை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் விஜயின் பிரச்சாரப் பேருந்து இன்று பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிட் அண்ட் ரன் வழக்கில் விஜய் வாகனத்தை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஜய் பிரச்சாரத்தில் புகுந்த ரவுடிகள்... சதிதான்...! நீதிமன்றத்தில் காரசார விவாதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share