×
 

#BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்...!

கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சூரிய மின்சக்தி கருவி... வாக்குறுதி என்னாச்சு? தமிழக வெற்றி கழகம் சரமாரி கேள்வி...!

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில் தற்போது விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு வருவதாக அறிவித்துவிட்டு 7 மணிக்கு விஜய் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு விஜய் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டி வந்த நிலையில் விஜயிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்..!! தவெகவில் ஐக்கியமான முன்னாள் ஐ.ஜி..!! யார் இந்த சந்திரன்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share