×
 

#BREAKING: சென்னை திரும்பினார் விஜய்..! சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது? தவெக விளக்கம்..!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட நிலையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக பல தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜயிடம் என்பதற்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர்.

நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் விஜய் தற்போது சென்னை திரும்பி உள்ளார். விஜய்யிடம் ஒரு நாள் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த விசாரணை தொடருமா? என்னென்ன விஷயங்கள் விசாரணையில் கேட்கப்பட்டது என்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகனுக்கு மீண்டும் அதிர்ச்சி… கேவியட் மனு தாக்கல்… இடியை இறக்கிய சென்சார் போர்டு..!

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். சிபிஐ விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தார். விஜய் எந்த தேதியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்பது தொடர்பாக இன்னும் தேதி வெளியிடப்படவில்லை என்றும் விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டிய நிர்மல் குமார், ஜனநாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது என்றும் தங்கள் தலைவரின் கடைசி படம் என்பதால் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடி நல்ல முடிவை எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: துணிச்சல் எப்படி வருது? வன்முறை புகலிடமா தமிழ்நாடு? கிழித்து தொங்கவிட்ட தவெக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share