×
 

ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு திரும்பிய விஜய் ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகர்கள்... ஜனநாயகன் படம் பார்த்து திரும்பிய போது சோகம்

திருப்பாச்சேத்தியில் ஜனநாயகன் சினிமா பார்த்து விட்டு ஊர் திரும்பிய விஜய் ரசிகர்கள் மீது கார் மோதியதில் முவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் ( 32 ) வழக்கறிஞரான இவர் விஜய் ரசிகராவார். தனது நண்பர்கள் வெங்கடேஷ் (27,) சிபி  சக்கரவர்த்தி ( 22) ஆகியோருடன் திருப்புவனத்தில் இருந்து ஒரே டூ வீலரில் கானூரில் நடந்த முளைப்பாரி திருவிழாவில் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

அதனைத் தொடர்ந்து மானாமதுரை சென்று ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு 7.30 மணி அளவில் மதுரை- ராமநாதபுரம் 4 வழிச்சாலை வழியாக  திருப்புவனம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி அருகே வரும்போது இளையான்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் டூ வீலரின் பின்னால் அதிவேகமாக மோதியது .இதில் டூவீலரில் சென்ற மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரின் முன் பகுதி , டூவீலரும் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் மதுரையைச சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் விசாரித்து வ
விஜய் ரசிகர்கள் மூவர் ஒரே சமயத்தில விபத்தில் உயிரிழந்தது சோகத்த ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share