×
 

திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைக்கிறதா தவெக? பனையூரில் 2 மீட்டிங்!!

பரந்தூர் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்று அக்கட்சி தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களாக தவெக சார்பாக நடந்து வரும் கல்வி விருது நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று பரிசுகளை அளித்து வருகிறார். இதன் 4ஆம் கட்ட விழா நாளை மீண்டும் நடக்கவுள்ளது. 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழு மற்றும் விவசாயிகளை விஜய் சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: “அந்த 6 பேர் மட்டுமில்ல” - சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய்... ஷாக்கில் ஸ்டாலின், எடப்பாடி...!

விஜய் தனது முதல் கள அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்துதான் தொடங்கினார். ஜனவரி மாதம் பரந்தூர் சென்ற விஜய், அங்குள்ள விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வகையிலும் ஆதரவாக நிற்கும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தவெக அலுவலகத்தில் பரந்தூர் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் தவெக அலுவலகத்திற்கு வந்து விஜயை சந்தித்தனர்.

அவர்களை வரவேற்று உபசரித்த விஜய், பின்னர் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது விஜய்-க்கு போராட்டக் குழு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன்பின் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜாக்டோ ஜியோ அமைப்புச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு விஜயை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் அடுத்தடுத்து திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தவெக ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிங்க: தகாத செயலில் ஈடுபட்ட விஜய்.. குழந்தைகள் நல குழுவிடம் தவாக நிர்வாகி பரபரப்பு புகார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share