#BREAKING நெஞ்சே பதறுதே... குவியலாய் சடலங்கள்... பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு...!
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 கடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குழந்தைகள், ஒன்பது ஆண்கள் 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள தாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 50 தாண்டக் கூடுமென அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING சொன்னாங்களே செஞ்சாங்களா... திமுகவை நாராக கிழித்து தொங்கவிட்ட தவெக தலைவர் விஜய்..!!
மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கரூர் விரைந்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கரூர் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் 10 ரூபாய் மாஃபியா!! நாமக்கல்லில் கிட்னி திருட்டு! விஜய் மாஸ்டர் ப்ளான்! காத்திருக்கும் தொண்டர்கள்!