×
 

100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

100 அடி கொடி கம்பம் எதனால் சரிந்தது என்பது குறித்தும், புதிய கொடிக்கம்பத்தை நடுவது தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது . அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் விஜய் ஏற்கனவே மதுரை வந்துவிட்ட விஜய், தற்போது நட்சத்திர விடுதியில் இருப்பதாக கூறப்படுகிறது 

மேலும் மதுரை மாநாட்டு திடலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தொண்டர்களுக்கான இருக்கை வசதிகள், தண்ணீர், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தவுள்ளார். 

 இன்று பிற்பகல்  மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, ஒரு கார் அப்பளம் போல் நொறுங்கியது. தற்போது மாநாடு திடலுக்குள் கார்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மாநாடு நடைபெறும் திடல் நுழைவு வாயிலில் பவுன்சர்கள் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: “எனர்ஜெடிக், எக்ஸ்பிளோசிவ், ஹைபர் ஆக்டீவ்” - தவெக மாநாட்டில் தரமான சம்பவம் செய்யப்போகும் விஜய் - நண்பர் கொடுத்த முக்கிய தகவல்...!

இதனிடையே 100 அடி கொடி கம்பம் எதனால் சரிந்தது என்பது குறித்தும், புதிய கொடிக்கம்பத்தை நடுவது தொடர்பாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: “சிம்பிளி வேஸ்ட்...” தவெக மாநாட்டை ஒத்த வார்த்தையில் டேமேஜ் செய்த அப்பாவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share