மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!
தமிழகத்தை காக்க வந்த அவதார புருஷனை போல விஜயின் பேச்சு இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார். பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் கொள்கை எதிரி எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆர் எஸ் எஸ்-க்கும், மதவாத சக்திகளுக்கும் ஆதரவு தரும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்தார். 2026 தேர்தல் TVK, DMK ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலானது தான் என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் சமபங்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் பேச்சில் திருப்தி இல்ல... தாடி பாலாஜியின் சர்ச்சை ஸ்டேட்டஸ்!
விஜயின் பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயின் பேச்சை விமர்சித்தார்.
விஜய் மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷரை போல அவரது பேச்சு இருந்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம்., ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உங்க விஜய் நான் வரேன்.. 2026 நம்ம தான்! தொண்டர்கள் மத்தியில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!