அமித்ஷா முகத்திற்கு நேராகவே சொன்ன சி.எம். விஜய்.. தமிழகத்தின் முக்கிய திட்டத்திற்கு வந்த திடீர் சிக்கல்...!
இரு மாநில மெட்ரோ அமைப்புகளுக்கு இடையேயான தொழில்நுட்ப வேறுபாடுகள், நிர்வாக அனுமதி மற்றும் நிதி சிக்கல்கள் இருப்பதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கடந்த 2025ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
பெங்களூருவின் பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை சுமார் 23 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. தமிழகப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், கர்நாடகப் பகுதியில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.
இரு மாநில மெட்ரோ அமைப்புகளுக்கு இடையேயான தொழில்நுட்ப வேறுபாடுகள், நிர்வாக அனுமதி மற்றும் நிதி சிக்கல்கள் இருப்பதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கடந்த 2025ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: “அந்த பேச்சுக்கே இடமில்லை...” - அமித் ஷா முன்பே ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன சி.எம்.விஜய்... கர்நாடாகாவுக்கு இடி...!
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெங்களூரு – ஓசூர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.
திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாற்று வழியாக, இரு மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை தனித்தனியாக மெட்ரோ ரயில் பாதைகளை அமைத்து, நடைபாதை மேம்பாலம் மூலம் அவற்றை இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூரு வரை சுமார் 140 கிலோமீட்டர் தொலைவுக்கு விரைவு ரயில் சேவை அமைப்பது குறித்தும் கர்நாடக அரசு ஆய்வு செய்து வருகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவை புறக்கணித்தாரா ரங்கசாமி?... முதல்வர் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? - புதுச்சேரி சி.எம். அலுவலகம் விளக்கம்...!