#BREAKING: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு..!
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்துள்ளார்.
அதிமுகவின் தூண்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். காரணம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சந்தித்து பேசியதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவை ஒருங்கிணைப்பை எனக் கூறிய செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிந்து உள்ள அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பேன் என்று கூறி வந்த செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொடுக்க அக்கட்சி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் கசிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டை எனக்கு அதிகாரம் தரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் எந்த பதவி வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: செங்கோட்டையன் ராஜினாமா எதிரொலி... விஜய் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை...! வலுக்கும் எதிர்பார்ப்பு...!