×
 

கரூர் விஷயத்தில் என்மேல ஏன் பழியை தூக்கி போட்டீங்க? முதல்வரை கேள்விகளால் துளைத்த விஜய்..!!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தன் மீது ஏன் பழி சுமத்தினார் என்ற விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்ததை சுட்டிக்காட்டினார்.

தனக்கு எதிரிகள் இல்லை என்று முதலமைச்சர் கூறியதை தெரிவித்த விஜய், அப்போது எதற்கு கரூர் விஷயத்தில் தன்மீது பழி போட்டீர்கள் என்ற கேள்வி எழுப்பினார். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நண்பர்கள் என்றால் எதற்கு எங்கள் கூட்டத்திற்கு அனுமதி கூட கொடுக்க மாட்டீர்கள் என்று கேட்டார்.

லஞ்சம், ஊழல் போன்றவை தான் உங்கள் உண்மையான நண்பர்கள் என்று தெரிவித்தார். உங்கள் ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையான ஆட்சி என்றார். தனக்கு எதிராக செய்யும் செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரான செயல்கள் என்றும் தானும் மக்களும் இரத்தமும் சதையும் போன்றவர்கள் எனவும் தெரிவித்தார். விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: இது விஜய்க்கும் ஸ்டாலினுக்குமான போர்.!! காதை கிழித்த விசில் சத்தம்… விஜய் ஃபயர் ஸ்பீச்..!!

எங்கள் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்று ஆரம்பித்துள்ளதாகவும் எங்கள் வாக்குச்சாவடி விஜய வாக்குச்சாவடி என்று அர்த்தம் எனவும் தெரிவித்தார். மக்களுடைய ஆதரவை பார்த்து அவர் அறியாமலே அப்படி பேசிவிட்டாரா என்று தெரியவில்லை எனக் கூறினார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்தபோது நல்லாட்சி நடந்ததாகவும் அவர்கள் ஆண்டபோதுதான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ஆக இருந்தது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேலூரில் விஜய் களமிறங்கும் முன்பே... தரமான சம்பவம் செய்த தவெக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share