விசில் ஊதுங்க... அந்த சத்தம் தான்..! ஊழல் ஆட்சி குப்பைக்கு போகும்..! விஜய் உறுதி..!
ஊழல் ஆட்சியை மக்கள் குப்பையில் போடுவார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.
2024 தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலை தான் முதல் முதலாக சந்திக்கிறது. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் உற்சாகத்துடன் களமாடி வருகிறது. கட்சிப் பணிகள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு என பல்வேறு கட்ட முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜய், காசு கொடுத்து ஓட்டை வாங்க முடியாது என்றும் தெரிவித்தார். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும் போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த இளம் தலைமுறையினருக்கும் ஒன்று சொல்ல விரும்புவதாக கூறினார். காதிலும் விசிலை ஊதுங்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் செய்தார். எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்றும் எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எனவும் உறுதிமொழி எடுக்கச் செய்தார். உங்கள் ஊழல் ஆட்சியை மக்கள் குப்பையில் தூக்கி போட போகிறார்கள் என திமுகவை விமர்சித்தார்.
இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!
எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்றும் பணத்தை தூக்கி குப்பையில் போடுங்கள் எனவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கும் சேர்த்துதான் தன்னுடைய அரசியல் என்றும் தெரிவித்தார். அனைவரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வையுங்கள் என்றும் கூறினார். யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும் வெறுப்பு அரசியல் தாங்கள் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்க விஜய் நா வரேன்... சேலத்தில் பிரச்சார நிகழ்ச்சி... தொண்டர்கள் செம்ம குஷி..!