×
 

உங்கள மாதிரி “அப்படி” பேசணுமா? யாரு ஓசி… வாயில் வடை சுடும் திமுகவா நாங்க? கேள்விகளால் துளைத்த விஜய்…!

ஈரோடு மக்கள் சந்திப்பில் விஜய் உரையாற்றினார்.

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈரோட்டில் நடத்தும் மக்கள் சந்திப்பு முதல் பெரிய பொதுக்கூட்டம். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் நடக்கிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு சந்திப்பும், புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பொதுக்கூட்ட வடிவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார். மாடல் அரசு எனக் கூறுவதற்கு கூச்சமாக இல்லையா என்றும் நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது என்று மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைத்த பேசினார். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக் கூறிக் கொள்வதாக விமர்சித்தார். ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பிரச்சனையை எடுத்து பேசி வருவதாகவும் இது அரசியல் கிடையாதா எனவும் விஜய் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 24 மணி நேரமும் என்ன பத்தியே யோசனை… பெரியார் பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல்… விளாசிய விஜய்…!

மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது அரசியல் இல்லையா என்றும் இல்லை உங்களை போல் அநாகரீகமாக பேச வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வது எப்படி இலவசமாகும் என்றும் ஓசி எனக்கூறி அசிங்கப்படுத்துகிறீர்கள் எனவும் தெரிவித்தார். வாயிலேயே வடை சுடும் திமுகவா நாங்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தம்பி… நீ கீழ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன்… ஈரோட்டில் மாஸ் காட்டும் விஜய்….!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share