ஒரே ஸ்ட்ரோக்- ல ஆட்சிக்கு வருவாராம்... நடக்குற காரியமா? விஜயை வறுத்தெடுத்த திருமா..!
விஜயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் நுழைவு பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். இது திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு புதிய சவாலாக அமைந்தது. ஆனால், விஜயின் அரசியல் பயணம் தொடங்கியது முதலே ஒரு குறிப்பிட்ட விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது.
களத்திற்கே வராமல், ஷூட்டிங் முடித்துவிட்டு ஆட்சியைப் பிடிப்பேன், முதலமைச்சர் ஆகுவேன் என்று கூறுகிறார் என்பது. இந்த விமர்சனத்தின் பின்னணி, விஜய் முழு நேர அரசியல்வாதியாக இன்னும் மாறவில்லை என்பதே. கட்சி தொடங்கிய பிறகும் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோட் மற்றும் ஜனநாயகன் போன்ற படங்கள் அவரது கடைசி திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டன.
ஆனால் அவை முடியும் வரை அரசியல் களத்தில் முழு ஈடுபாடு இல்லை என்று எதிர்க்கட்சியினரும் சில அரசியல் விமர்சகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் அல்லது பனையூர் பண்ணையார் என்று கிண்டல் செய்யப்படுகிறது. விஜய் பொதுமக்களை நேரடியாக சந்திக்காமல், உள்ளரங்க கூட்டங்கள் மட்டுமே நடத்துவதாகவும், போராட்டங்களில் பங்கேற்காமல் இருப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன. திமுக தொண்டர்களும் சில எதிர்க்கட்சியினரும் இதை முன்னிறுத்தி, அரசியல் என்பது ஷூட்டிங் ஸ்பாட் அல்ல, களப்பணி தேவை என்று வாதிடுகின்றனர்.
இதையும் படிங்க: தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" - திருமாவளவன் விமர்சனம்
இந்த நிலையில் விஜய் குறித்து விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். Quarter-final-ல பங்கேற்கமாட்டார்., Semi Final-லயும் பங்கேற்கமாட்டார் என்றும் நேரடியாக Final-ல போய் வெற்றி பெற்றுவிடுவாராம் தம்பி விஜய் எனவும் விமர்சனம் செய்துள்ளார். ஒரே ஸ்ட்ரோக்ல ஆட்சிக்கு வந்துவிடுவாராம் என்றும் அது அரசியல் அறியாமைதான் என்றும் கூறிய திருமாவளவன், அரசியலில் அப்படியெல்லாம் வர முடியாது என கூறினார்.
இதையும் படிங்க: "அதிமுக - திமுக ரகசியக் கூட்டணி?" அதிமுகவின் முகத்திரையை கிழித்த தவெக நிர்மல்குமார்!!