"ரூ.2 கோடி இருந்தா பேசு” - விஜய் கட்சியில் நடக்கும் மெகா வசூல் வேட்டை... தளபதியை மிஞ்சும் சின்ன தளபதிகள்...!
கட்சி தொடங்கிய நாளிலிருந்தே மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மீது பதவிக்கு பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் பிரதானமாக உள்ள திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல், அநீதி, அராஜகம் செய்கிறது. நாங்கள் வந்தால் நல்ல முறையில் ஆட்சி தருவோம் எனக்கூறி தான் தளபதி விஜய் கட்சி ஆரம்பித்தார். ஆனால் முளைத்து மூணு இலை விடுவதற்கு முன்பே தவெகவில் வசூல் வேட்டை தலைவிரித்து ஆடத்தொடங்கியது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், போஸ்டரில் விஜயை விட தன்னுடைய போட்டோவை பெரிதாக போடச்சொல்வது, கட்அவுட் பேனர்கள் வைக்கச் சொல்வது என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு செலவு இழுத்துவிடுவதில் ஏற்கனவே சகலகலா வல்லவராக திகழ்ந்துவருகிறார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
மேலும் கட்சி தொடங்கிய நாளிலிருந்தே மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மீது பதவிக்கு பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவி வழங்க பணம் வசூல் செய்கிறார், கட்சி கூட்டங்களை பிரம்மாண்ட ஏற்பாடு செய்ய வற்புறுத்துகிறார், காரில் ஊர்வலம் வருவது முதல் அனைத்து செலவுகளையும் மாவட்ட செயலாளர்கள் தலையில் கட்டுகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வட்டச் செயலாளர் பதவிக்கே லட்சம், லட்சமாக கமிஷன் கேட்ட சின்ன தளபதிகள், 2026 தேர்தலை விட்டு விடுவார்களா?. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால் 234 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும், அதில் பெயர் இல்லை என்றால் அப்செட் ஆகக்கூடாது என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க: தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!
அதற்கு பின்னால் இப்படியொரு சூசகம் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளிலும் களப்பணியாற்றி காத்திருக்கும் தவெகவினரை விட கரன்சியை கொட்டிக் கொடுப்பவர்களே சீட்டு என்ற திமுக, அதிமுக பாணியைத் தான் தவெகவும் கையில் எடுத்துள்ளதாம். 2026 தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கேட்டுப் போனால், 2 கோடி ரூபாயை எடுத்து வை நாளைக்கே உன் பெயர் உறுதி செய்யப்படும் என்கிறதாம் தலைமைக்கு அடுத்துள்ள சின்னத் தலைமை.
ஒரு கோடி வேண்டுமானால் தருகிறோம், ஒரு கோடியை தேர்தல் செலவுக்கு வைத்துக்கொள்கிறோம் என்று கூறினால்…செல்லாது செல்லாது ரெண்டு கோடி இருந்தா பேசு இல்லாட்டி இடத்தைக் காலி பண்ணு, அந்த இடத்திற்கு வேற ஆளை இட்டாண்டு கொள்வோம் என்கிறார்களாம். அதிர்ச்சியில், சரி, இது விஜய்க்குத் தெரியாமலா நடக்கிறது என பார்த்தால்.
இந்த பேரத்தில் ஆதவ் அர்ஜுனாவோ, செங்கோட்டையனோ எல்லாம் இல்லை நேராக புஸ்ஸி ஆனந்தே கையாள்கிறார். விஜய்க்குத் தெரியாமல் ஆனந்த் எப்படி இதைச் செய்வார் என்று கேட்ட பருந்தார், விஜய்க்கான “தேர்தல் 2026” எனும் சினிமாவுக்கு பட்ஜெட் 2000 கோடி ரூபாய். அது எதுவும் விஜய் பணம் இல்லை. அப்படிப் பார்த்தல் 234 வேட்பாளர்களுக்கு 2 கோடின்னு போட்டா 468 கோடி ரூபாய். இந்த வருவாயை விஜய் எப்படி விடுவார் ? என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது... கண்டிஷன் போட்ட கவுன்சிலர்..! குக்கர்ல விசில் அடிக்கலாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!