×
 

ஏ விஜய் வெளிய வா…! என்ன சீண்டிப் பார்த்தா அவ்வளவுதான்…! சேலத்தில் மாஸ் காட்டிய விஜய்..!

சேலத்தில் தமிழக வெற்றி கழக பிரச்சார நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.

2024 தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலை தான் முதல் முதலாக சந்திக்கிறது. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் உற்சாகத்துடன் களமாடி வருகிறது. கட்சிப் பணிகள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு என பல்வேறு கட்ட முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவதுதான் கரேஜ் என்றும் எந்த விஷயத்தில் நம்மை கிண்டல் கேலியாக பேசுகிறார்களோ அதையே வெற்றியாக மாற்றி காட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

ஏ விஜய் வெளிய வா என்று தன்னை பற்றி பேசுவதாகவும் தன் வீடு எங்கிருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டார். தமிழ்நாடு தான் என் வீடு என்றும் என் வீட்டில் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். என்னை சீண்டி பார்ப்பதாக நினைத்து கேலி கிண்டல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான் என்றும் கூறினார். எல்லாவற்றையும் விட்டு மக்களுக்காக வந்திருப்பதாகவும் ஓட்டு கேட்டு வரவில்லை என்றும் நீதி கேட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு மட்டும் என் இடம் மறுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பினார். SOP குறித்து அரசியல் ரீதியாக விஜய் விமர்சித்துள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலுவர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்தார்.

இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share