SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!
ராஜ்மோகனின் கருத்தை விமர்சிக்கும் வகையில் பதிலளித்தார். இதனால் தவெக–காங்கிரஸ் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாகியுள்ளது.
தமிழக அரசியலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR தொடர்பாக தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தவெக தனது நிலைப்பாட்டை தனியாக வெளிப்படுத்தியுள்ளது. SIR நடைமுறை தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் ராஜா விமர்சித்திருந்தார். விஜய் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே தவெக அமைச்சர் ராஜ்மோகன் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டுமானால், வாக்காளர் பட்டியலை முழுமையாக சீரமைக்கும் நடவடிக்கை அவசியம் என்றும், அந்த நிலைப்பாட்டில்தான் தவெக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெகவில் இணைகிறார் செம்மலை? முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரசாரத்தில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம்?!
அதேநேரம், பிரச்சினையை திசைதிருப்பும் அரசியல் நடவடிக்கைகளுக்கு தாங்கள் இரையாக மாட்டோம் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்மோகனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்வினை தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் வெளியிட்ட அறிக்கையில், ராஜ்மோகனின் கருத்தை விமர்சிக்கும் வகையில் பதிலளித்தார். இதனால் தவெக–காங்கிரஸ் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாகியுள்ளது.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் நடைமுறை ரீதியான சீர்திருத்தங்கள் தேவை என்பதே கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம், தலைமை தேர்தல் கமிஷனரை குறிவைத்து நடத்தப்படும் அரசியல் போராட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அரசியல் அறிக்கைகள் அல்லது போராட்டங்களை விட, வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் பிரச்சினைக்கு நடைமுறை தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தங்கள் அணுகுமுறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இடைத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த பதவிகளை பெற அக்கட்சிக்குள் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு மற்றும் கட்சி பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல், தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சராகிறார் சவுமியா அன்புமணி! முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல்! தவெக அமைச்சரவையில் பாமக என்ட்ரி?