×
 

அடப்பாவிகளா? தவெக கட்சிக்கொடியில் திடீர் கலர் மாற்றம்... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த நாகை நிர்வாகிகள்...!

நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காக கட்டப்பட்ட தவெக கட்சி கொடி கலர் மாறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சுற்றுப்பயணத்தில் பிசியாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். கடந்த 13ம் தேதி திருச்சியில் முதல் முறையாக தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கினார். திருச்சியை தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிவிட்டார். அதிக அளவில் கூட்டம் கூடுவதால் விஜயின் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

நாளை நாகையில் புத்தூர் ரவுண்டானாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி புத்தூர் அண்ணா சிலை பகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாகை எஸ்பியிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12:30 மணிக்கு புத்தூர் அண்ணா சிலைக்கு விஜய் வருவார் என தமிழக வெற்றி கழகத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அரை மணி நேரத்தில் பேச்சை முடிக்க வேண்டும், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனத்தை தொடர்ந்து வரக்கூடாது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது நாகை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வரணும்னு சொன்னேன்தான்! அதுக்காக இப்படியா? சீமான் பரபரப்பு பிரஸ்மிட்...!

இதனையடுத்து விஜய்யை வரவேற்க நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கொடி கட்டுவது போன்ற தடபுடலான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காக கட்டப்பட்ட தவெக கட்சி கொடி கலர் மாற்றப்பட்டது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தவெக கொடியின் நடுவில் உள்ள மஞ்சள் நிறத்திற்கு பதிலாக காவி நிறம் (ஆரஞ்ச்)  இடம்பெற்றதால் கட்டிய கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. தற்போது தவெகவினர் சரியான கொடிகளை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 

இதையும் படிங்க: “அந்த தப்பு மட்டும் திரும்ப நடக்கவே கூடாது...” - ஸ்ட்ரிக்ட் ஆக உத்தரவு போட்ட விஜய்... தவெக நிர்வாகிகளுக்கு சம்மட்டி அடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share