நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!
கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த், தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் மற்றும் பொது வாழ்விலும் தனித்துவமான அடையாளத்தைப் பதித்த ஒரு மாபெரும் ஆளுமை. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் மிகுந்த உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.
விஜயகாந்த், நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயருடன், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்தார். அவரது தந்தை கே.என். அழகர்சாமி மற்றும் தாய் ஆண்டாள். மதுரை மண்ணில் பிறந்து, அந்த மண்ணின் பண்புகளையும், மக்களின் அவலங்களை அறிந்து வளர்ந்த விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், மக்களுக்கு நெருக்கமானவராகவே விளங்கினார்.
விஜயகாந்தின் பிறந்தநாள், அவரது வாழ்நாளில், எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஒரு விழாவாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி, ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வண்டிகள், இஸ்திரிப்பெட்டிகள் போன்றவற்றை வழங்கினார். மேலும், தனது கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தினார்.
இதையும் படிங்க: UNCLE -ஐ அங்கிள் தான் சொல்ல முடியும்... மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ..!
இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறினார். சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் விஜயகாந்தை தனது அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டு பேசு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: WHAT BRO… அடக்கி வாசிங்க BRO…. மதுரை முழுவதும் விஜயை கண்டித்து போஸ்டர்கள்!