×
 

தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

தேர்தல் முறைகேடு வழங்கி சி விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் நடைமுறையின்போது வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தை எட்டியது.

தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்த பின்னர், சில தொகுதிகளில் போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். திமுக சார்பில் இந்தக் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இடங்களில் கோயம்புத்தூர் தெற்கு, பர்கூர், பலக்கோடு, கும்பகோணம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இந்த விநியோகம் தேர்தல் விதிகளை மீறிய செயல் எனக் கூறி புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையம் இதனைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் FIR பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும், திமுகவுக்கு ஷோகாஸ் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. 

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களில், தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. போலீசார் புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிமன்றம், அந்த மனுக்களை முடித்து வைத்தது. இந்தச் சம்பவம் தேர்தல் நடத்தை விதிகளின் அமலாக்கம் குறித்த விவாதங்களைத் தூண்டியது. 

இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் ராஜினாமா எதிரொலி..! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு.!

இதேபோல், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்பில் ஒத்த வகை முறைகேடுகள் குறித்த புகார்களை எழுப்பின. தேர்தல் ஆணையம் அனைத்து புகார்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. இந்தக் கூப்பன் விவகாரம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் கொடுத்த முறைகேடு விவகாரத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. திமுக தொடர்ந்த வழக்கில் விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: விடிந்ததுமே கொதித்தெழுந்த தமிழச்சி... விருப்பத்தை கட்டாயமாக்கிய மத்திய அரசால் அப்செட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share