×
 

இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

இன்றைய விழாவில் நீங்கள் பார்த்தது வெறும் டிரெய்லர் தான், டெல்டாவில் நடக்கப்போவது தான் மெயின் பிக்சர் என தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட இணைப்பு விழாவில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். 

விழாவில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய டாக்டர் சி.விஜயபாஸ்கர், “இன்று நீங்கள் பார்த்தது வெறும் டிரெய்லர் தான். டெல்டா பகுதியில் நடக்கப் போவது தான் மெயின் பிக்சர்” என்று பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்பே அதிமுக தலைமையிடம் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தியதாகவும், ஆனால் அதை ஏற்கவில்லை என்றும் விஜயபாஸ்கர் கூறினார். “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க மறுத்துவிட்டு, திமுகவுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது சரியா? தீய சக்தியுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது சரியா?” என்று எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளை கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

“முதலமைச்சர் விஜய் என்ற உறுதியான தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம்” என்று அவர் உறுதியளித்தார். மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அதிமுகவினர் பலர் தவெகவில் இணைந்துள்ளதாகவும், பழையன கழிந்து புதியன புகுந்ததால் இங்கு கூடியுள்ள ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்துள்ளதாகவும் பேசினார்.

மேலும், “முதலமைச்சரிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள், டெல்டாவில் மிகப் பெரிய இணைப்பு விழாவை நடத்திக் காட்டுவோம். காவிரி - குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவோம். ஜல்லிக்கட்டுக்கு துணை நிற்போம்” என்று வாக்குறுதியும் அளித்தார்.

இந்த இணைப்பு விழா தவெகவுக்கு புதிய வலுவை அளித்துள்ளது. டெல்டா பகுதியில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படப் போவதாக விஜயபாஸ்கரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share