×
 

கரூர், சேலம் உயிர்பலி இனி நடக்காது! வேலூருக்கு பக்கா ப்ளான்! தவெக விஜய் நிகழ்ச்சியில் முதல்முறை! 23-ல் பாருங்க!

சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்' என, கட்சித் தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளதால், நிறைய முன்னெச்சரிக்கையோடு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

தமிழக அரசியலில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், வரும் 23-ஆம் தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். முதலில் 'மக்கள் சந்திப்பு' கூட்டமாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், இப்போது நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கட்சியினர் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறுகையில், “கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்படி, எந்த சிறு அசம்பாவிதமும் நடைபெறாமல் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

அதனால், முன்பு சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் வெயிலால் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை மனதில் கொண்டு, இம்முறை முதல் முறையாக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 4,900 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால், அனைவருக்கும் நாற்காலிகள் போடப்பட்டு உட்கார வைக்கப்படுவர்” என்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி!! கறார் காட்டும் போலீசார்! 20 நிபந்தனைகள் விதிப்பு! தவெக-வினர் அப்செட்!

மேலும், கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். வெயில், மயக்கம் போன்ற சூழலில் உடனடி மருத்துவ உதவி கிடைக்க, மினி மருத்துவ வேன்கள் தயார் நிலையில் இருக்கும். மருத்துவர்கள், மருந்துகள் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 10 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். 

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் விஜய் அவர்களின் “சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்” என்ற உத்தரவால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போலீஸ் அனுமதி மறுப்பால் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டாலும், நிர்வாகிகள் சந்திப்பு மூலம் கட்சியின் அமைப்பு வலுப்படுத்தப்படும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விஜய் தலைமையிலான த.வெ.க.வின் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால், இந்த ஏற்பாடுகள் கட்சியின் பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நல அக்கறையை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 23-ஆம் தேதி வேலூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காங்கிரஸே வந்தாலும் வேணாம்! மோடியை சமாளிக்க முடியாது! புது ரூட்டில் தவெக!! விஜய் எடுத்த மாஸ்டர் மூவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share