கூட்டம் பத்தலையே!! விஜயை ஏமாற்றிய புதுச்சேரி! பரிசீலனையில் என்.ஆர்.காங்கிரஸ்!!
விஜயின் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் யோசனையை பரிசீலனையில் வைத்துவிட்டார் முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக புதுச்சேரியில் நடத்திய பொதுக் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை.
உப்பளம் துறைமுகப் பகுதியில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டம் மிகக் குறைவாகவே திரண்டது. இதனால், தவெகூவுடன் கூட்டணி அமைக்கூடும் என்று ரகசியமாக கணக்குப் போட்டிருந்த முதல்வர் என். ரங்கசாமி திடீரென பிளானை கைவிட்டுவிட்டதாக என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தை நேரில் பார்க்காமல், ஆரோவில்லில் உள்ள பிரபலமான மார்க் கபேவில் காபி குடித்தபடியே லைவ் ஒளிபரப்பை முழுமையாக பார்த்தார் முதல்வர் ரங்கசாமி. அதே நேரம் அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் நேரடியாக சென்று கூட்ட அளவை “அளந்து” வந்தனர். “விஜய்க்கு இவ்வளவு தான் செல்வாக்கா?” என்ற அதிர்ச்சியும் ஏமாற்றமும் கலந்த புன்னகைதான் ரங்கசாமியின் முகத்தில் தெரிந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை தவெக ஆலோசனை கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... முழு விவரம்...!
என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திறந்த மனதுடன் பேசினர்: “முதல்வர் மனதில் ஒரு கணக்கு இருந்தது. விஜய் கூட்டத்தில் பெரிய கூட்டம் வந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகூவுடன் கூட்டணி அமைத்து அதிரடி காட்டலாம் என்று யோசித்திருந்தார். ஆனால் இப்போது அந்த ஐடியாவையே டிராப்பாக்கிவிட்டார். இனி தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே (NDA) தொடர்ந்து பயணிப்பார்” என்று உறுதிபடக் கூறினர்.
விஜய் ரசிகர்கள் சிலர் “மழை பெய்தது, போக்குவரத்து பிரச்சனை இருந்தது” என்று சப்பைக் கட்டுகட்ட, அரசியல் பார்வையாளர்கள் “புதுச்சேரியில் விஜய்க்கு இன்னும் பெரிய அளவில் பேஸ் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, ஒரு காபி கோப்பையும் லைவ் ஸ்ட்ரீமிங்கும் சேர்ந்து புதுச்சேரி அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது போலத் தெரிகிறது!
இதையும் படிங்க: டெல்டாவுக்கு குறிவைக்கும் விஜய்..!! தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்.?? பக்கா பிளான்.!!