கொள்கையா? கிலோ என்ன..? இவங்க எல்லாம் நம்மள பத்தி பேசுறாங்க… விஜய் பதிலடி..!
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியுள்ளார்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முடங்கியது. பிறகு கட்சிப் பணிகளை மெல்ல தொடங்கினார் விஜய். இந்த நிலையில் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து தனது மக்கள் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது விஜய் உரையாற்றினார். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை இல்லையா என்று கேட்டார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூறிய தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை இல்லையா என்று கேட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை இல்லை என்று சொல்லும் திமுகவின் கொள்கையை கொள்ளை தானே என்று விமர்சித்தார். 22.70 யூனிட் மணல் கொள்ளை அடித்து காஞ்சிபுரம் ஜீவ நதியான பாலாற்றை அழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மணல் திருட்டின் மூலம் 4730 கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: உண்மையான வரலாற்று நாள்..!! சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விஜய் உருக்கமான வாழ்த்து..!!