என்ன ஆச்சு...?? - விளாத்திக்குளம் மாணவி வழக்கில் அடுத்த ஷாக்... இரவோடு இரவாக திடீர் மாற்றம்...!
தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து இரவோடு இரவாக மதுரை சிறைக்கு திடீர் மாற்றம்
தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து இரவோடு இரவாக மதுரை சிறைக்கு திடீரென மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி காணாமல் போனார். இது குறித்து அவது பெற்றோரும் கிராமத்தில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் அங்க உள்ள காட்டு பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து குற்றவாளி கைது செய்வதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த வகையில் வந்து அபகுதியில் உள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலமாக குற்றவாளி யார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல அந்த மாணவியின் உடற்கூராய்வு மற்றும் சிசிடிவியில் பதிவான வாகன திருட்டு விவகாரம் அனைத்தும் இந்த குற்றச்சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் தான் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்திற்கு கையெழுத்து போடுவதற்காக வந்த தர்ம முனீஸ்வரனை வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: விளாத்திக்குளம் மாணவி வழக்கில் திடீர் திருப்பம்... மொத்தம் 8 பேர்... டி.என்.ஏ. பரிசோதனை பற்றி திடுக்கிடும் தகவல்...!
அப்பொழுது வழக்கில் தொடர்பு உடையது தர்ம முனீஸ்வரன் தான் என்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை செய்த நீதிபதி பிரீத்தா 14 நாட்கள் ஏப்ரல் 2ம் தேதி வரை தர்ம முனிஸ்வரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று மாலையில் தர்ம முனிஸ்வரனை நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைத்த சில மணி நேரத்தில் இரவோடு இரவாக தென் மாவட்டத்தையே உலுக்கிய வழக்கு இந்த பாலியல் கொலை வழக்கு என்பதால் வேறு ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தர்ம முனீஸ்வரனை சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!