அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!
வத்தலகுண்டு அருகே வாக்குச்சாவடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள். தெருக்களில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம். நடத்தி எதிர்ப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட விருவீடு அருகே கம்பூதிநாயக்கன்பட்டி, காலனி மற்றும் மாயாதிபுரம் உட்கடை கிராமங்கள் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 400 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இக்கிராம மக்கள் ஒவ்வொரு முறை நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கம்பூதிநாயக்கன்பட்டியில் அமைக்கப்படும் வாக்கு சாவடி மையத்தில் கீழ அச்சனம்பட்டி, எம்ஜிஆர் நகர், கீழ தெப்பத்துப்பட்டி, மாயாதிபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் வாக்களித்து வந்தனர். அதேபோல் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அருகில் உள்ள விருவீடு அரசு பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பின் போது கம்பூதிநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு கீழஅச்சனம்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கம்பூதிநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு கீழஅச்சனம்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்ட விபரம், இக்கிராம மக்களுக்கு தெரிய வந்தது.
இதையும் படிங்க: அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!
இதனால் தங்கள் கிராமத்திற்கு உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குச்சாவடி மையம் அமைப்பது போல் தற்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் கம்பூதிநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் எனக்கூறி தெருக்களில் கருப்புக் கொடி கட்டி, சுவரொட்டிகள் ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். வாக்குச்சாவடி முன்பு அப்பகுதி மக்கள் கருப்பு கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நிலக்கோட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் கிராம மக்கள் உள்ளனர். வத்தலகுண்டு அருகே சுமார் 400 வாக்காளர்கள் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!