கோர விபத்து..! ஸ்கேட்டிங் கனவுடன் சென்ற குடும்பம்! பிஞ்சுக் குழந்தை உட்பட பறிபோன உயிர்கள்..!!
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கனவுகளுடன் ஸ்கேட்டிங் பயிற்சிக்குச் சென்ற ஒரு குடும்பம் சந்தித்த சோகமான விபத்து, மூன்று உயிர்களைப் பறித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் குருமாபேட்டைச் சேர்ந்த தமிழ்மணி, அவரது மனைவி குணவனிதா மற்றும் அவர்களது குழந்தை கீர்த்தன் குருபரன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 18ஆம் தேதி ஆரோவில் அருகே உள்ள இரும்பை கூட்டுசாலை பகுதியில் புதுச்சேரி-சென்னை நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஸ்கேட்டிங் பயிற்சியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றபோது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. அந்த மோதலில் குணவனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழ்மணி மற்றும் குழந்தை கீர்த்தன் குருபரன் ஆகியோர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதையும் படிங்க: பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துடிதுடித்து பலி...!
சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று காலை குழந்தை கீர்த்தன் குருபரனும், அதைத் தொடர்ந்து தமிழ்மணியும் உயிரிழந்தனர். இதனால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடுத்தடுத்து உயிரைப் பறிகொடுத்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரோவில் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?