செஞ்சி சிறுமி மாயம்.! திணறும் போலீஸ்... தொடரும் மர்மம்..! ஆலம்பூண்டியில் அதிமுக சார்பில் போராட்டம்..!
செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இன்னும் கண்டுபிடிக்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமானது தொடர்பாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். செஞ்சி பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுமி கடந்த 12 ஆம் தேதி காணாமல் போன நிலையில், 15 நாட்கள் கழித்தும் அவளைக் கண்டுபிடிக்க முடியாத காவல்துறையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி திடீரென மாயமானதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால் உள்ளூர் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுகவினர் ஆலம்பூண்டியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
சிறுமியை விரைவில் கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறையின் செயல்பாடு போதுமானதாக இல்லை எனக் குற்றம்சாட்டிய அதிமுகவினர், பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
இதையும் படிங்க: குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!
சிறுமி மாயமானதில் இருந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவளது பாதுகாப்பு குறித்த அச்சம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே அதிகரித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், விரைவான விசாரணை மற்றும் சிறுமியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சிறுமியை இன்னும் மீட்காததை சுட்டிக்காட்டி அதிமுகவினர் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!