×
 

திமுகவில் ஓரங்கட்டப்படும் பொன்முடி.. இனி அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி?

விழுப்புரத்தில் நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்முடிக்கு எந்தவிதமான அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பொன்முடியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய அளவிலாவது புகைப்படத்தை பேனரில் வைத்திருக்கலாமே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

காரணம் விழுப்புரத்தில் திமுகவின் முகமாக இருந்தவர் பொன்முடி. விழுப்புரத்தில் திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பொன்முடி. இந்த நிலையில் விழுப்புரத்திலேயே பொன்முடி புறக்கணிக்கப்பட்டிருப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: டம்மியான பொன்முடி ... சீனுக்கு வந்த கனிமொழி... திமுகவில் அதிரடி மாற்றம்...!

சர்ச்சை பேச்சுக்கு ஆளான பொன்முடியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கினர். பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது பொன் முடியின் மகன் கௌதம சிகாமணியின் பொறுப்பையும் திமுக தலைமை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி திமுகவிலிருந்து பொன்முடி ஓரங்கட்டப்பட்டு வரும் சம்பவம் அவரது அரசியல் பயணத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதையும் படிங்க: பியூஸைப் பிடுங்கியும் குறையாத வாய்க்கொழுப்பு... எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த பொன்முடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share