×
 

மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

போதைப் பொருள் தொடர்பாக அமைச்சர் சரத் கொடுத்த விளக்கத்திற்கு வினோஜ் பி செல்வம் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் தமிழ்நாடு மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதை உண்மையென நம்பி பகிர்ந்தனர். ஆனால், சரத்குமார் இதை முழுமையாக மறுத்து, தவறான பிரசாரம் என்று விளக்கம் அளித்தார். 

வீடியோவில் சரத்குமார் மைதானத்தில் அமர்ந்திருக்கும் காட்சி தெரிகிறது. அவர் ஏதோ ஒன்றை நொறுக்கி அல்லது பயன்படுத்தும் செயல் போதைப்பொருள் உட்கொள்வது போல் தோன்றியதால், பலர் அதை போதை மருந்து எனக் கருதினர். சமூக ஊடகங்களில் இது வேகமாகப் பரவியது. சிலர் இதை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்த முயன்றனர்.சரத்குமார் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக விளக்கம் அளித்தார். அந்த வீடியோவில் அவர் செய்தது போதைப்பொருள் அல்ல, தனது குழந்தைக்கான மாத்திரையை நொறுக்கி கொடுப்பது என்று தெரிவித்தார். குழந்தைக்கு மருந்து கொடுக்கும் சாதாரண செயலை தவறாக சித்தரித்து, வேண்டுமென்றே தவறான பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

அமைச்சர் சரத்குமார் விளக்கம் கொடுத்த நிலையில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ள பதில்களில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறினார். ஒன்றரை குழந்தைக்கு டானிக் கொடுக்காமல், மருத்துவர் மாத்திரை கொடுக்க சொன்னாரா? என்று கேட்டுள்ளார். உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிக்கொண்டு ஐபிஎல் பார்க்க சென்றீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: NLC பங்குகளை தாரைவார்ப்பதா..? மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

மாத்திரையை இரு விரல்களால் நசுக்கி தண்ணீரில் போட்டிருந்தாலே கரைந்திருக்குமே என்றும் போன் மீது கொட்டி, காற்றில் பறக்காமல் இருக்க ரூபாய் நோட்டை வைத்து மறைத்து, ஏடிஎம் கார்டால் ஒன்று சேர்த்து..... குழந்தைக்கு மருந்து கொடுக்கும் அழகா இது என்றும் வினவினார். எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைக்கு மருந்து கொடுத்த வீடியோவிற்கு Thug life Moment என்று தலைப்பிட்டு வெளியிட்டது யார்? என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். 

இதையும் படிங்க: "கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறை"..! குத்தாட்டம் போடும் அமைச்சர்..! விளாசிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share