மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!
கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் பாஜக வினோஜ் பி. செல்வம் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணியான மோனிகா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மோனிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக வாசுதேவன் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பரிசோதனை முடிந்து, இருவரும் வீடு திரும்பும் வழியில், சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.இந்த மோதலின் தாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த வாசுதேவனும் மோனிகாவும் தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனம் சாலையில் தூக்கி வீசப்பட்டு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு சென்றவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மோனிகா, பலத்த காயங்களால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் வாசுதேவன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாஜகவை சேர்ந்த வினோஜ் பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டே மாதத்தில் 30 கொலைகள்... எலெக்ஷன்-ல இருக்கு..!! திமுகவை பந்தாடிய நயினார்..!!
அந்த அதிவேக காரின் பின்னால் வந்த மற்றொரு காரில் உள்ள Dash Cam பதிவுகள் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையில் புகார் செய்த பிறகும், விபத்தை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் என்ற நபரை திமுக பிரமுகர் என்ற காரணத்திற்காக அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் காவல்துறை விடுவித்ததாக தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த SIR யார் என்றும் கேட்டுள்ளார். இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகங்களை ஆட்சி முடியும் நேரத்தில் கூட திமுக நிறுத்திக் கொள்ளாது என்றால், இனி மக்கள்தான் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த நாட்டு எரிசக்தி அனுமதி தேவையா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!