இந்த சுவரு எத்தன காவு வாங்க போகுதோ? விஜயை கண்டித்த வினோஜ் பி. செல்வம்..!
சேலம் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி வினோஜ் பி. செல்வம் விமர்சித்து உள்ளார்.
கரூர் சம்பவத்தின் துயரம் இன்னும் மக்களின் மனதில் நீங்காத நிலையில், அதே தவெக தலைவர் விஜய்யின் பிரசார நிகழ்ச்சி தொடர்பான மற்றொரு இழப்பு இன்று சேலத்தில் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். அதில் பல குழந்தைகள், பெண்கள் உட்பட பலரின் உயிர்கள் பறிபோனது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த துயரத்தின் நிழல் விலகும் முன்பே, இன்று சேலத்தில் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சூரஜ் என்ற 37 வயது இளைஞர், வெள்ளிப் பட்டறை தொழிலாளியாக சேலத்தில் பணியாற்றி வந்தவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.
விஜய்யின் பிரசார நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றிருந்ததால் மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!
இந்தச் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகின்றதோ என கேள்வி எழுப்பினார். ஏதோ முதல் முறை, தெரியாமல் நடந்து விட்டது என்றால் பரவாயில்லை என்றும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதே தவறு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தன்னை நம்பி வருகின்ற மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உயிர் பாதுகாப்பின் மீது ஒரு தலைவர் கொண்டிருக்கின்ற அக்கறையை இது நிரூபணம் செய்கின்றது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவின் அடுத்த ஊழல்... வாரி சுருட்ட பிளான்..! தின்னு கொழுத்தது போதலையா? நயினார் விளாசல்..!